லுங்கி இங்கிடிக்கு மாற்று வீரராக ஸ்காட் குகேயேலிஜின் தேர்வு

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் சென்னை அணிக்கு அற்புதமான தொடக்கமாக அமைந்துள்ளது. சென்னை அணி முதல் போட்டியில் பெங்களுர் அணியையும், இரண்டாவது போட்டியில் டெல்லி அணியையும் வீழ்த்தி தற்போது ஐ.பி.எல் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடிக்கு காயம் ஏற்ப்பட்டது. இதனால் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார் லுங்கி இங்கிடி. அதே போல் இன்று சென்னை அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லியும் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சென்னை அணியில் அணியில் இருந்து அடுத்தடுத்து இரண்டு வேகப் பந்து வீச்சாளர்கள் விலகியதால், சென்னை அணியின் பந்துவீச்சு பலவீனமாக காணப்பட்டது. இதனால் இவர்களுக்கான மாற்று வீரரை சென்னை அணி அறிவிக்கும் என எதிர் பார்க்கப்பட்டது.

தற்போது தென் ஆப்ரிக்க வீரர் லுங்கி இங்கிடிக்கு மாற்று வீரராக, நியூஸ்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஸ்காட் குகேயேலிஜினை ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை அணி .

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.