இமாலய இலக்கு இரண்டு சதம் பெங்களுரை மிரள வைத்த ஹைதராபாத்

ஐ.பி.எல் 12வது சீசனின் 11வது லீக் போட்டியில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களுர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து ஹைதராபாத் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

வழக்கத்திற்கு மாறாக டேவிட் வார்னர் நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் ஜானி பேர்ஸ்டேபெங்களுர் அணியின் பந்து வீச்சை சிக்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசினார்.

பேர்ஸ்டோ 56 பந்தில் 114 ரன்களை விளாசி அவுட்டானார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ஐ.பி.எல்லில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து அதிரடி காட்டிய டேவிட் வார்னர் 55 பந்தில் 100 ரன்களை கடந்து சதம் அடித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். இதனால் ஹைதராபாத் அணி 20 ஒவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை குவித்தது.

சாதனைகள்

இப்போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டிற்கு 185 ரன்களை சேர்த்தது. இது தான் ஐ.பி.எல் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு ஒரு ஜோடி சேர்த்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள்.

அதே போல் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஜோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்துள்ளது. இது நடப்பது ஐ.பி.எல் வரலாற்றில் இது தான் முதல் முறை.

ஐ.பி.எல் வரலாற்றில் ஒரே இன்னிங்சில் இரண்டு வீரர்கள் சதம் அடிப்பது இது இரண்டாவது முறை . பே்ரஸ்டோ (114), வார்னர் (100).

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.