பெங்களுர் அணியை நசுக்கி ஹைதராபாத் அணி இமாலய வெற்றி

2019ம் ஆண்டின் 11வது ஐ.பி.எல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் பெங்களுர் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் பங்கேற்கலில்லை. இதனால் ஹைதராபாத் அணியை புவனேஷ்வர் குமார் கேப்டனாக வழிநடத்தினார்.

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பெங்களுர் அணியின் பந்து வீச்சை தும்சம் செய்தனர். ஜானி பேர்ஸ்டோ (114), டேவிட் வார்னர் (100*) ஆகியோர் சதம் அடிக்க, விஜய் சங்கர் 9 ரன்னில் ரன் அவுட்டாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்களை குவித்தது. பெங்களுர் அணியில் சகால் 4 ஓவரில் 44 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி பெங்களுர் அணி களம் இறங்கியது. ஆரம்பம் முதலே ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பெங்களுர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

மிகவும் எதிர்பார்த்த சிம்ரான் ஹெட்மயர் ( II), விராட் கோலி (3), ஏபி-டி-வில்லியர்ஸ் (1) ஆகியோர் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அந்த அணியில் அதிகபட்சமாக காலின் டி கிராண்ட்ஹோம் 37 ரன்களை எடுத்தார். பெங்களுர் அணி 19.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணியில் முகமது நபி 4 ஓவரில் 11 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.