மேட்ச் பிக்சிங் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் எப்போதும் ஸ்டம்புக்கு பின் இருந்து எதையாவது பேசிக் கொண்டிருப்பார். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சர்ச்சையை கிளப்பிவிடும். அது போல் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது எதேர்ச்சியாக ஒன்றை சொல்ல அது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நேற்று இரவு 8.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. இதனையாந்தது சூப்பர் ஓவர் முறையில் கொல்கத்தா அணியை வீழ்தியது டெல்லி அணி.

நேற்று கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் மற்றும் நிகில் நாயக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். 3.4வது ஓவரில் நிகில் நாயக் 7 ரன்னில் அவுட்டானார். இதனை தொடர்ந்து உத்தப்பா பேட்டிங் செய்ய வந்தார்.

அப்போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் இதோ நான்கு ரன் வரும் பாரு என்று கூறினார். அவர் கூறியது போலவே உத்தப்பா பவுண்டரி விளாசினார். இப்படி ரிஷப் பண்ட் பேசியது ஸ்டம்ப் மைக் வழியாக நேரலையில் ஒளிபரப்பானது.

இதனை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பில்டி போட்பிகள் என்றாலே மேட்ச் பிக்சிங் தான். முதல் இரண்டு போட்டியில் சிக்சர்களாக அடித்த ரிஷப் பண்ட் இந்த போட்டியில் சிங்கிள் மட்டும் ஆடுகிறார். இதிலிருந்தே ஐ.பி.எல் போட்டிகள் பிக்சிங் என்று தெரிகிறது என டிவிட்டரில் ரிஷப் பண்டை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டீசன்கள்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.