ரோகித் சர்மாவுக்கு அபராதம் பி.சி.சி.ஐ திடீர் அறிவிப்பு

நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் சிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்தது. ரோகித் சர்மா (32), குவின்டன் டி காக் (60) என அதிரடி தொடக்கம் தந்து அவுட்டாகினர். இதனை தொடர்ந்து வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், பொலார்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனை தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 19 பந்தில் 31 ரன்களை குவிக்க மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கெயில் 40 (24) மற்றும் மயங் அகர்வால் 43 (21) ரன்களை அடித்து அதிரடி காட்ட, நிதானமாக கடைசி வரை ஆடிய கே.எல் ராகுல் 71 (54) ரன்களை எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் வெற்றி இலகத்தை மிக எளிதாக எட்டியது.

ஆரம்பத்தில் இருந்து பஞ்சாப் அணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்த மும்பை அணி வீரர்கள் 19 ஓவர்களை வீசி முடிக்க கொடுக்கப்பட்டதை விட அதிக நேரம் எடுத்து கொண்டனர். இதனால் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் அபராதமாக விதித்துள்ளது பி.சி.சி ஐ.. பந்து வீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் அபராதம் வாங்கிய முதல் கேப்டன் ரோகித் சர்மா.

ஐ.பி.எல் விதிகளின்படி, ஒர் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் 20 ஓவர் பந்து வீசி முடிக்காவிட்டால், அந்த அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.