ஒரு பக்கம் படிப்பு மறு பக்கம் ஐ.பி.எல் கலக்கும் பெங்களுர் அணி வீரர்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இப்போட்டியில் வார்னர் (100*), ஜானி பேர்ஸ்டோ (114) என இருவரும் சதம் விளாசி அசத்தினர். அதே சமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட டிவில்லியர்ஸ் (1), விராட் கோலி (3) ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களுர் அணி 16 வயதே நிரம்பிய பிரயாஷ் பார்மன் என்ற புதுமுக வீரரை அறிமுகப்படுத்தியது. இவர் தனது அறிமுகப் போட்டியில் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 56 ரன்களை விட்டு கொடுத்தார். இவர் மட்டுமல்ல நேற்றைய போட்டியில் அனைத்து பெங்களுர் அணி பவுலர்களும் மோசமாக தான் பந்து வீசினர்.

இவர் கொல்கத்தாவில் உள்ள கல்யானி பொதுப் பள்ளியில் 12 வகுப்பு (காமர்ஸ்) சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தின் கீழ் பயின்று வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன் தான் சி.பி.எஸ்.சி பரிட்சையை முடித்து விட்டு பெங்களுர் அணியுடன் இணைந்தார். அதனை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் தனது முதல் போட்டியிலும் விளையாடி விட்டார்.

தற்போது இவர்தான் ஐ.பி.எல் போட்டியில் மிகக் குறைந்த வயதில் பங்கேற்ற இளம் வீரர். நேற்றைய போட்டியில் இவரது வயது 16 வருடம் 157 நாள்கள்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.