வெற்றிக்கு அவரை மட்டும் தான் பாராட்டனும் பென்ஸ் ஸ்டோக்ஸ் அதிரடி

நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி பவர் பிளே முடிவதற்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்தது. இதனை தொடர்ந்து தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருந்தாலும் சென்னை அணி 14 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

இதனையடுத்து கடைசி 6 ஓவரில் தோனி அதிரடி காட்ட சென்னை அணியின் ஸ்கோர் எகிற ஆரமித்தது. அதிலும் கடைசி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். தோனி 46 பந்தில் 75 ரன்களை எடுக்க, சென்னை அணி 20 ஓவரில் 175 ரன்களை குவித்தது.

இதனைwடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களை மட்டும் எடுக்க சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பிறகு பென் ஸ்டோக்ஸ் தோனி பற்றி கூறியதாவது, ஒர் அணியை இது போன்ற சரிவில் இருந்து மீட்க உலக தரம் வாய்ந்த ஒரு சில கிரிக்கெட் வீரர்களால் மட்டும் தான் செய்ய முடியும். அதை தோனி இன்று செய்தார். இன்றைய வெற்றிக்கு தோனியை தான் பாரட்ட வேண்டும். ஒரு போட்டியை கடைசி வரை எடுத்து செல்லும் திறன் அவருக்கு உள்ளது. சாத்தியமே இல்லை இருந்தாலும் தோனியால் மட்டும் இதை எப்படி செய்ய முடிகிறது என தெரிய வில்லை.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.