CSK Win ஹர்பஜன் செம டுவிட்

இந்திய அணியின் அனுபவ சுழந்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

அந்நாள் தொடங்கி இந்நாள் வரை தமிழகத்தில் தமிழ் வளர டுவிட்டர் வழியாக அரும்பாடுபட்டு வருகிறார் ஹர்பஜன் சிங். ஒவ்வொரு முறையும் சென்னை அணி வெற்றி பெறும் போது தமிழில் டுவிட் செய்வது வழக்கம். இதனால் அவருக்கு வள்ளுவர் சிங், தமிழ் புலவர் என்று புனைப் பெயர்களை சூட்டியுள்ளனர் டுவிட்டர்வாசிகள் .

இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோனி 46 பந்தில் 75 ரன்களை குவித்தார். அதுவும் உனத்கட்டின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சரை அடித்து தெரிக்க விட்டார்.

தோனியின் ஆட்டத்தை பார்த்த ஹர்பஜன் ஒரு டுவிட்டை தட்டியுள்ளார். தற்போது அது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த அந்த டீம் தடய தாண்டி @msdhoni புடிச்சி தொங்க,அந்த #தல மேட்சுல அடி வெளுக்க,என்னடா இழவு வாழ்கன்னு மேல பாத்தா @ipl கப்பு கீழ @CSKFansOfficial ஏழு டீமும் கப்பாவது மேச்சாவதுன்னு,கும்புடு போட்டு ஆஹானு சொன்னா.அது @ChennaiIPL #SuperDeluxe நன்றி சேது ஜி என டுவிட் செய்துள்ளார்”.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.