இங்லாந்தில் சுக்கு நூறாய் கிழிக்கப்பட்ட அஸ்வினின் புகைப்படம் கோர முகத்தை காட்டிய ஆண்டர்சன்

கடந்த வாரம் நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு நடந்து முடிந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில், அஸ்வினின் ஃபோட்டோவை காகிதத்தை துண்டு துண்டாக நறுக்கும் இயந்திரத்தில் வைத்து சுக்கு நூறாக கிழித்துள்ளார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்த வீடியோ அஸ்வினின் மன்கட் அவுட்டுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன்னின் தனித்துவமான பழி திர்க்கும் வீடியோ என்ற பெயரில் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

முன்னதாக அஸ்வினின் செயலலுக்கு பல இங்கிலாந்து வீரர்களும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் டுவிட்டரிலோ அல்லது பேட்டியின் போதோ தங்களது கருத்தை நாகரீகமான முறையில் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

ஆனால் உலகின் முன்னனி வேகப் பந்து வீச்சாளராக இருக்கும் ஆன்டர்சன் இது போன்ற அநாகரிமாக முறையில் கண்டனத்தை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஸ்வின் செய்த மன்கட் அவுட் இளம் கிரிக்கெட்டர்களுக்கு தவறான முன்னுதாரனம் என்றால், ஆன்டர்சன் நீங்கள் செய்த செயல் இளம் வீரர்களுக்கு தவறான முன்னுதாரனம் ஆகிவிடாதா.

ஒர் இந்திய கிரிக்கெட் வீரரின் புகைப்படத்தை கிழிக்க உங்களுக்கு எனன உரிமை உள்ளது. இது தான் ஒரு வீரருக்கு நீங்கள் தரும் மரியதையா, இதை தான் உங்கள் நாடு கற்று தந்ததா, இது போன்ற செயல்கள் உங்களின் கோர முகத்தை காட்டுகிறது என பல நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.