இன்று தோனி பிராவோ செய்யப் போகும் சிறப்பான சம்பவம் ஐ.பி.எல் தொடரில் புதிய மைல்கல்

இன்று இரவு நடைபெறும் ஐ.பி.எல் I5வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரிச்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் மூன்று முறை கோப்பையை வென்ற சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ ஆகியோர் புதிய மைல்கல் ஒன்றை எட்ட உள்ளனர்.

2 ரன் மட்டும் தேவை:
இதுவரை 178 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 4123 ரன்களை குவித்துள்ளார். இதில் சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல்லில் 3549 ரன்களும், புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட் அணிக்காக 574 ரன்களும் அடித்துள்ளார்.இது தவிர சி.எஸ்.கே அணிக்காக சாம்பியன் டிரோபி டி20 தொடரில் 449 ரன்கள் அடித்துள்ளார்.

இதுவரை சி.எஸ்.கே அணிக்காக மட்டும் தோனி 3998 ரன்களை அடித்துள்ளர். இன்றைய போட்டியில் தோனி இரண்டு ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் தோனி சி.எஸ்.கே அணிக்காக 4000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டுவார்.

1 விக்கெட் தேவை:
இதுவரை 125 ஐ.பி.எல் போட்பிகளில் விளையாடி உள்ள டிவைன் பிராவோ 142 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் சி.எஸ்.கே அணிக்காக 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்றைய போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் சி.எஸ்.கே அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெறுவார். இவர் மும்பை அணிக்கு எதிராக மட்டும் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.