ஒரே ஒரு அதிரடி மாற்றத்துடன் களம் இறங்கும் சென்னை அணி

2019 ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் 15 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்ய சென்னை அணியும், சொந்த மைதானத்தில் தோல்வி அடைய கூடாது என்று மும்பை அணியும் என இரண்டு அணிகளிலும் வெற்றிக்காக தீவிரமாக முயற்சி செய்யும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

சென்னை அணியை பொறுத்த வரை பேட்டிங், பவுலிங் பீல்டிங் என அனைத்து பிரிவிலும் வலுவாக உள்ளது. இருந்தாலும் இன்றைய போட்டியில் ஒரு மாற்றம் இருக்கும் என எதிர் பார்க்கப்பட்டுகிறது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் ஹர்பஜன் சிங். 2018ம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை அணி ஹர்பஜனை கழட்டி விட்டது. அதனை தொடர்ந்து அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை அணி வாங்கியது.

மும்பை அணிக்கு ஹர்பஜன் சிங் ஆடிய போது அதிக முறை வான்கடே மைதானத்தில் விளையாடி உள்ளதால் இன்றைய போட்டியில் மிட்செல் சாண்ட்னர் நீக்கப்பட்டு ஹர்பஜன் அணியில் பீண்டும் இடம்பெறலாம்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.