நான்காவது வீரர் பிரச்சனையை ஒரே ஐடியாவில் தீர்த்த கபில் தேவ்

2019ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் முடிந்த பின் இந்திய வீரர்கள் நேரடியாக இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி எப்ரல் 20ந் தேதி அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

மேலும் 4வது வரிசை வீரரை மட்டும் ஐ.பி.எல் போட்டிகளை வைத்து தேர்வு குழு தேர்ந்தெடுக்கும் என தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் யார் 4வது இடத்திற்கு சரியாக இருப்பார்கள் என கணித்து கூற ஆரமித்தனர்.

இந்த 4 வது வீரர் பட்டியலில் அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், தினேஷ் கார்த்திக் தொடங்கி சஞ்சு சாம்சன் மற்றும் பிரித்வி ஷாவில் வந்து நிற்கிறது. இதில் விராட் கோலியின் பெயரும் பரிசீலனைக்கபட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இருக்கும் இந்த பிரச்சனைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஒரு யோசனை அளித்துள்ளார்.

உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை 4வது வரிசை வீரரை தேர்ந்தெடுக்காததும், அந்த இடம் ஐ.பி.எல் போட்டி கொண்டு நிரப்பப்டும் என தெரிவித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. இது நல்ல முடிவு அல்ல.

இந்த பிரச்சனையை சமாளிக்க இந்திய அணிக்கு ஒரு வழி மட்டுமே உள்ளது. அது போட்டிகளின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்களை களம் இறக்குலது தான். அதாவது விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழும் போது தோனி போன்ற அனுபவ வீரரையும், அதிக ரன்களை துரத்தும் போது ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி வீரரை சூழ்நிலைக்கு ஏற்ப இறக்குவதுதான் நல்லது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.