பரம எதிரிகள் சென்னை மற்றும் மும்பை அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர். ஐ.பி.எல் தொடரின் பரம எதிரிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதுவதால் இன்றைய போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

புள்ளி பட்டியல்:
சென்னை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், மும்பை அணி விளையாடிய 3 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி:
சென்னை அணி நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் எந்தவொரு பதற்றமோ திண்டாட்டமோ இல்லாமல் எதிரணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் அளித்த வாட்சன் மற்றும் ராயுடு ஆகியோர் இந்தாண்டு இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே இருவரும் இன்றைய போட்டியில் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம்.

தற்போது சென்னை அணியில் தோனி, பிராவே, ரெய்னா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதே போல் பந்து வீச்சில் இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

மும்பை அணி:
மும்பை அணி விளையாடிய மூன்று போட்டிகளில் பெங்களுர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அந்த போட்டியையும் கடைசி ஓவர் கடைசி பந்தில் திக்குமுக்காடி தான் வெற்றி பெற்றது.

Mohali 30/03/2019: Mumbai Indian skipper Rohit Sharma and Quinton de Kock played an initial partnership of 51 runs during an IPL match played between Kings XI Punjab and Mumbai Indians at PCA stadium in Mohali on Saturday, March 30 2019. Photo: Akhilesh Kumar

மும்பை அணிக்கு ரோகித் சர்மா, குவின்டன்-டி-காக் ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தாலும், மிடில் ஆர்டரில் அந்த அணி மீண்டும் சொதப்பி வருகிறது. இதனால் மும்பை அணியால் பெரிய அளவு ரன்களை குவிக்க முடியவில்லை. பேட்டிங்கில் ரோகித், டி காக் , ஹர்திக் பாண்டியா நல்ல ஃபார்மில் உள்ளனர்.

கடந்த ஆண்டு மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடி சூர்யகுமார் யாதல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் இன்று ஃபார்முக்கு திரும்புவது அவசியம். பந்து வீச்சில் பும்ரா தனது பணியை செவ்வனே செய்து வருகிறார்.

பேட்டிங்கில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்: தோனி, ரெய்னா, வாட்சன், ரோகித் சர்மா, குவின்டன்-டி-காக், ஹர்திக் பாண்டியா, யுவராஜ் சிங் .

பந்து வீச்சில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்: பும்ரா, இம்ரான் தாஹிர்.

மாற்றங்கள்: இன்றையே போட்டி மும்பையில் நடைபெறுவதால் சென்னை அணியில் ஹர்பஜன் சிங் இடம் பெறலாம். அதே சமயம் மும்பை அணியில் ஜேசன் பெகரண்டாஃப் இடம் பெறலாம்.

மைதானம்:
இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு முழுமையாக ஒத்துழைப்பு தரும். இதனால் இன்று முதலில் பேட் செய்யும் அணி 180+ ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது.

நேருக்கு நேர்: இதுவரை 26 முறை இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளனர். 12 முறை சென்னை அணியும், 14 முறை மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 போட்டியில் நான்கு போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி யாருக்கு: இன்றைய போட்டியில் மோதும் இரண்டு அணிகளும் வலுவான அணிகள் என்றாலும், மும்பை அணிக்கு இது சொந்த மைதானம் என்ற அட்வான்டேஜ் உள்ளது. எனவே இன்றைய போட்டியை மும்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.