பெங்களுர் அணிக்கு பெரும் பின்னடைவு தாயகம் திரும்பும் 4 வெளிநாட்டு வீரர்கள்

வழக்கம் போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு இந்தாண்டும் மோசமான தொடக்கமாகவே அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இரு தினங்களுக்கு முன் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் நேதன் குல்டர்நைல் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் பெங்களுர் அணியில் இணைந்தனர். இதனால் 5 வது போட்டியில் இருந்தாவது பெங்களுர் அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் நியூஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை தொடருக்கான 15 கொண்ட நியூஸ்லாந்து அணியை அறிவித்துள்ளது. இதில் தற்போது ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் பல முக்கிய வீரர்கள் (வில்லியம்சன், காலின் -டி- கிராண்ட்ஹோம், காலின் மன்ரோ, டிம் சவுத்தி, டிரன்ட் போல்ட், லூக்கி பெர்குசன், இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர்) இடம் பெற்றுள்ளன.

SEDDON PARK, HAMILTON, NEW ZEALAND – 2017/02/19: Tim Southee (R) and Colin de Grandhomme (L) in their partnership during the International match between New Zealand and South Africa in Hamilton in New Zealand. South Africa wins by 4 wicket. (Photo by Shirkey Kwok/Pacific Press/LightRocket via Getty Images)

மேலும் இந்த நியூஸ்லாந்து அணி ஆஸ்ரேலியா அணியுடன் 3 அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் எப்ரல் 13ந் தேதி தொடங்கி மே 1 வரை நடைபெறுகிறது.

இதனால் பெங்களுர் அணியில் இருக்கும் நேதன் குல்டர்நைல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், காலின் -டி- கிராண்ட்ஹோம், டிம் சவுத்தி என நான்கு முக்கிய வீரர்கள் ஒரு வாரத்திற்குள் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதுவரை நான்கு போட்டிகளில் பங்கேற்றுள்ள பெங்களுர் அணிக்கு பேட்டிங், பீல்டிங், பவுலிங் என எதுவும் செட்டாகவில்லை. இந்நிலையில் முக்கிய வீரர்கள் தாயகம் திரும்ப உள்ளதால் பெங்களுர் அணி மேலும் பின்னடைவை சந்திக்க உள்ளது. இதனால் விராட் கோலி விழி பிதுங்கி உள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.