மும்பை அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம் தாக்கு பிடிக்குமா சென்னை அணி

பரபரப்பான இன்றைய ஐ.பி.எல் லீக் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு பலப்பரிட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல் தொடரில் பரம எதிரிகளாக கருதப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மும்பை அணியை பொறுத்த வரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்க பகுதி பலவீனமாக உள்ளதாக கருதப்படுகிறது. இன்றைய போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர் பார்க்கப்படுகிறது.

அதே சமயம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஆஸ்ரேலிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெகரண்டாஃப் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி மும்பை அணியில் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

எதிர்பார்க்கப்படும் மும்பை அணி: ரோகித் சர்மா (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், யுவ்ராஜ் சிங், கைரன் பொல்லார்ட், க்ருணால் பாண்டியா, ஹந்திக் பாண்டியா, மயங்க் மார்க்கண்டே, ஜேசன் பெகரண்ட்டாஃப், லசித் மலிங்கா, ஜஸ்பிரித் பும்ரா.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.