மூன்றை நான்காக மாற்றுங்கள் எனது ஒரே ஆசை இது மட்டும் தான் சச்சின் வேண்டுகோள்

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ந் தேதி இந்திய அணி 50 ஓலர் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை செய்தது. உலக கோப்பையை வென்றதன் எட்டாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு லிட்டில் மாஸ்டர் சச்சின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக கோப்பையை வெல்லும் இந்திய அணியில் நானும் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்ற ஆசை சச்சினுக்கு இருந்தது. 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 உலக கோப்பை தொடரில் விளையாடினார்.
ஒன்றில் இந்தியா உலக கோப்பையை வெல்ல முடியவில்லை.

அதிகபட்சமாக 2003ம் ஆண்டு இறுதி போட்டி வரை முன்னேறியது இந்திய அணி. ஆனால் இறுதி போட்டியில் ஆஸ்ரேலிய அணியிடம் படு தோல்வி அடைந்தது.

இதனையடுத்து ஏப்.,2 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அப்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சச்சினின் ஆசையும் நிறை வேறியது

இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது., என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இது தான். இதே நாள் 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது. அதில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது.

2019 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கபடவில்லை என்றாலும், இந்தாண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும். இந்திய அணியின் ஜெர்சியை கூர்ந்து கவனித்தால் லோகோவிற்கு மேல் மூன்று ஸ்டார் இருக்கும்.

அது இந்திய அணி எத்தனை முறை உலக கோப்பையை வென்றுள்ளது என்பது தான். அதை மூன்றிலிருந்து நான்காக மாற்ற வேண்டும் என இந்திய அணிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் சச்சின்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.