அவர் அவுட்டாகும் வரை மரண பயத்தில் இருந்தோம் – மஹிலா ஜெயவர்த்னே

நேற்று நடைபெற்று ஐ.பி.எல் 15வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.

இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றி பற்றி மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்த்னே கூறியதாவது.,

ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் ஆபத்தான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அந்த அணிக்கு தோனி தலைமை தாங்குவது கூடுதல் பலம்.

கடந்த ஆண்டு கோப்பையை வென்ற சென்னை அணி இந்தாண்டும் அதே ஃபார்மில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளையும் வென்றுள்ளது.

எந்த அணிக்கும் தொடர்சியாக வெற்றி பெறும் ஒரு அணியுடன் மோதுவது என்பது சவாலான ஒன்று. அப்படி தான் இன்றைய போட்டி எங்களுக்கு இருந்தது.

நாங்கள் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களை மட்டுமே எடுத்தோம். இந்த ரன்கள் சென்னை அணியை கட்டுபடுத்த போதாது என நினைத்தோம்.

ஆனால் எங்கள் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தோனியின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா எடுத்த போது தான் போட்டி எங்கள் வசமானது. தோனி அவுட்டாகும் வரை மரண பயத்தில் இருந்தோம்.

எந்த நொடியிலும் போட்டியை மாற்றும் வல்லமை அவருக்கு உண்டு. ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்று தந்தார். இனி வரும் போட்டிகளில் இந்த வெற்றி தொடரும் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.