காத்திருந்த பாட்டியை சந்தித்த தோனி வைரலாகும் உருக்கமான வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநடுகளிலும் தோனியை பார்க்க பல ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருப்பார்கள்.

அந்த வகையில் தோனியை பார்க்க மும்பை மைதானத்துக்கு வந்திருந்த பாட்டியை தோனி  நேரில் சந்தித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் தோனியை நேரில் காணவும், சென்னை அணியை ஆதரிக்கவும் வயதான பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் வந்திருந்தார்.

இதைப் பற்றி போட்டி முடிந்தவுடன் தோனியிடம் மைதான அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே பாட்டியை காண தோனி வந்தார். தோனி கண்ட பாட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தோனியின் கையை பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.

சிறிது நேரம் தோனியிடம் பேசிய பாட்டி, தோனியுடன் செல்ஃபி எடுத்து கொண்டு விடைபெற்றார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.