டெல்லி அணியில் இரண்டு மாபெரும் மாற்றம் நிலை குலைய போகும் ஹைதராபாத் அணி

இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் டெல்லி பெர்ரோசா ஹோட்லா மைதானத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட், காலின் இங்ரம், டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகிய நான்கு வீரர்கள் களம் இறங்குவதால், அதிகப்படியான வான வேடிக்கைகளை ரசிகர்கள் எதிர் பார்க்கலாம்.

டெல்லி அணி தனது முந்தைய போட்டியில் 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து பஞ்சாப் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

இருந்தாலும் டெல்லி பேட்ஸ்மேன்கள் அனைவரும் டாப் ஃபார்மில் தான் உள்ளனர். இதனால் அந்த அணியின் பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

அதே சமயம் டெல்லி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு முழுமையாக ஒத்துழைக்கும் என்பதால் ஹர்சல் படேல், ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு அக்சர் படேல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஷ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), காலின் இங்ரம், கிறிஸ் மாரிஸ், அக்சர் படேல், சந்திப் லமிசானே, அமித் மிஸ்ரா, கசிகோ ரபாடா மற்றும் ஆவேஷ் கான்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.