பதிலி வீரர்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர் மொகமத் கைஃப் ஆவேசம்

ஐ.பி.எல் போட்டிகள் மெதுவாக நடப்பதாகவும், பதிலி வீரர்களை ஐ.பி.எல் அணிகள் துஷ்பிரேயோகம் செய்வதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான முகமது கைஃப் ஆவேசமாக பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது., இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டிகள் இரவு 11.15க்கு போட்டி முடிவடைய வேண்டும். ஆனால் இரவு 11.45 மணிக்கு சவ்வு போல் இழுக்கப் பட்டு முடிவடைகிறது. எனவே தற்போதைய ஐ.பி.எல் போட்டிகள் மந்தமாக நடைபெறுகிறது என்ற குற்றசாட்டு நியாமாதைே.

அதே போல் ஐ.பி.எல் போட்டிகளில் பதிலி வீரர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. கொல்கத்தா – டெல்லி இடையேயான போட்டியின் போது ஆன்ரே ரஸல் வெளியே செல்கிறார். ரிங்கு சிங் பதிலி வீரராக பீல்ட் செய்கிறார். அதன் பின் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களை வீசி விட்டு செல்கிறார். பின் அவருக்கும் ஒரு பதிலி வீரர்.

இவ்வாறு பீல்டிங்கில் மந்தமாக செயல்படும் வீரர்களின் ஓவர்களை விரைவில் முடித்து விட்டு இளம் பதிலி வீரர்களை களம் இறக்குகின்றன. இதனால் அதிக போட்டி நேரம் விரையமாகிறது.

எனவே நடுவர்கள் பதிலி வீரர்களை மாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். பதிலி வீரர்கள் எந்த ஓவர்களின் போது இறங்கலாம், எந்த இடங்களில் அவர்கள் பீல்ட் செய்யலாம் என புதிய விதிமுறைகள் அமைத்து கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.

அதே போல் டெல்லி – பஞ்சாப் போட்டியின் போது சர்ப்ராஷ் கான் பீல்டிங் செய்யாமல் பெவிலியனில் ஓய்வு எடுக்கிறார். ஆனால் அவருக்கு காயம் எதுவும் இல்லை, இருந்தாலும் மற்றொருவர் பீல்டு செய்கிறார். இது நியாயமற்றது.

மேலும் போட்டிக்கு முன் மணிக்கணக்கில் டீம் மீட்டிங் போட்டு பேசிவிட்டு தான் வருகிறார்கள். பிறகும் களத்தில் இறங்கி மீண்டும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு விவாதிக்கின்றனர், இவையெல்லாம் எதிரணியினரின் உத்வேகத்தை முட்டுக்கட்டைப் போடுவதோடு நேரத்தையும் விரயம் செய்கின்றனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.