மன்கட் அவுட் பற்றி முதல் முறையாக வாய் திறந்த ஜாஸ் பட்லர் எனது அவுட் நடுவர்களால் தவறாக கொடுக்கப்பட்டது

ஐ.பி.எல் 4வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் Uற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை குவித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் அதிரடி காட்டினார். இதனால் ராஜஸ்தான் 12.5 ஓவரில் 108/1 என இருந்தது. பட்லர் 69 ரன் அடித்திருந்தார்.

அப்போது பட்லரை அவுட்டாக்க முடியாமல் திணறிய அஸ்வின், குறுக்கு வழியில் பட்லரை மன்கட் முறையில் அவுட்டாக்கினார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த நிகழ்வு கிரிக்கெட் நிகழ்வில் பெரிய விவாத பொருளாக மாறியது.

இதுவரை இது பற்றி வாய் திறக்காமல் இருந்த பட்லர் தற்போது தனது கருத்தை கூறியுள்ளார்.

” மன்கட் அவுட் கிரிக்கெட் விதிகளில் ஒன்று தான். என்னை பொறுத்த வரை பவுலர்கள் பந்து வீசும் முன் பேட்ஸ்மேன்கள் பாதி பிட்ச் தாண்டி ரன் ஓடிவிடக் கூடாது என்பதை வைத்து மன்கட் விதி எழுதப்பட்டிருக்கலாம்.

நான் அவுட்டான் வீடியோவை கூர்ந்து கவனித்தால், அஸ்வின் பந்து வீச்சு ஆக்சனை செய்யும்போது நான் க்ரீஸ் உள்ளே தான் இருந்தேன். அதன் பின் தான் நான் நகர்ந்தேன்.

அன்று எனது அவுட் நடுவர்களால் தவறாக கொடுக்கப்பட்டது என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.