விருதை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் ஹர்திக் பாண்டியா உருக்கம்

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு மும்பை அணி.

இன்றைய போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா 8 பந்தில் 25 ரன் மற்றும் 4 ஓவர்கள் பந்து வீசி 20 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து முழு ஆல் ரவுண்டராக ஜொலித்தார்.

நேற்றைய ஆட்டம் முடிந்ததும் தனது ஆட்டம் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறியதாவது., எனது அணி வெற்றி பெற நான் உதவியதும், அதற்கு முழு பங்களிப்பை தந்ததும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த எழு மாதங்களாக நான் இது போன்ற போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. எழு மாதங்களில் வலை பயிற்சியில் தான் அதிகம் பேட் செய்துள்ளேன். நான் போட்டியின் கடைசி ஓவர்களை விரும்புபவன், அது போன்ற தருணங்களில் என்னாள் பந்தை நன்றாக அடித்து ஆட முடியும்.

எனக்கு அடுத்தடுத்து காயங்களும் அதனை தொடர்ந்து சில சர்ச்சைகளும் என் மீது எழுந்தன.கடந்த எழு மாதங்கள் என் வாழ்வில் மிக கடினமான பகுதியாகும்.

இன்று எனக்கு கிடைத்திருக்கும் விருதை (மேன் ஆஃப் தி மேட்ச்) என் கஷ்ட காலங்களில் என் உடன் இருந்தவர்களுக்கு அர்பணிக்கிறேன். தற்போது என்னுடைய ஒரே குறிக்கோள் எனது ஆட்டத்தை இப்படியே தொடர்வதும் அதன் மூலம் உலக கோப்பையை வெல்வது தான்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.