ஹைதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றம் நசுங்க போகும் டெல்லி அணி

இன்று இரவு 8 மணிக்கு டெல்லி ஃபெர்ரோசா ஹோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இளம் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி .

முந்தைய போட்டியில் பெங்களுர் அணியை 118 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத் அணிக்கு பேட்டிங் பவுலிங் என அனைததிலும் அதிக தன்னம்பிக்கையை தந்திருக்கும்.

ஹைதராபாத் அணியில் வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர் ஆகியோர் டாப் ஃபார்மில் உள்ளனர். கடந்த ஆண்டு முதல் பேட்டிங்கில் சொதப்பி வரும் மனிஷ் பாண்டே நீக்கப்பட்டு இளம் இந்திய வீரர் ரிக்கி புஹிக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர பார்க்க படுகிறது.

ரஷீத் கான், முகமது நபி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருவதால் பந்து வீச்சு பகுதியில் எந்த மாற்றமும் இருக்காது.

எதிர்பார்க்கப்படும் ஹைதராபாத் அணி: ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரிக்கி புஹி, யூசுப் பதான், ரஷீத் கான், முகமது நபி, புவனேஷ்வர் குமார்,
சித்தார்த் கெளல், சந்தீப் சர்மா.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.