அவரா இது அதிர வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கிறிஸ் கெய்ல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சிறிஸ் கெய்ல், தனது அணியின் சக வீரர் சாம் கர்ரணுடன் இருக்கும் இரண்டு படங்களை இன்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் இந்தாண்டு தான் தனது முதல் ஐ பி எல் தொடரில் களம் இறங்கியுள்ளார். அவர் விளையாடிய முதல் போட்டியிலே சாம் கர்ரனால் இந்திய மைதானங்களை uரிந்து கொண்டு பந்து வீச முடியாது என பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பேட்டிங்கில் 20 ரன்களை குவித்து ஆல் ரவுண்டராக ஜொலித்தார். தற்போது அனைவரும் சாம் கர்ரன் இங்கிலாந்து அணியில் பெரியாளாக வருவார் என ஆருடம் கூறி வருகின்றனர்.

சாம் கர்ரன் தான் பள்ளியில் படிக்கும் காலத்தில் கிறிஸ் கெய்லுடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இருவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பழைய சாம் கர்ரன் புகைப்படம் மற்றும் தற்போது தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் 211,070 லைக்குகளை பெற்றுள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.