இன்றைய போட்டியில் பலமான கொல்கத்தாவை எதிர்கொள்ளும் பெங்களுர் அணி

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் சொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

பெங்களுர் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக படுதோல்வியடைந்துள்ளது. இதனால் கோலியின் கேப்டன்சி மேல் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பெங்களுர் அணியின் பேட்டிங்கில் பார்திவ் பட்டேல் மட்டுமே அதிக ரன்களை அடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், சிம்ரன் ஹெட்மயர், சிவம் துபே ஆகியோர் இதுவரை சிறப்பாக ஆடவில்லை. இன்றைய போட்டியில் வெற்றி பெற இவர்கள் ஃபார்முக்கு திரும்புவது அவசியம்.

அதே சமயம் பந்து வீச்சில் யுகேந்திர சகால் மட்டும் சிறப்பாக பந்து வீசுகிறார். இந்த ஐ.பி.எல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியின் வெற்றி மிக முக்கியம்.

முந்தைய போட்டியில் டெல்லி அணியிடம் சூப்பர் ஓவரில் வீழ்ந்தது கொல்கத்தா அணி . இந்த தோல்வியில் இருந்து கொல்கத்தா அணி இன்று மீண்டு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் வலுவாக உள்ளது. அந்த அணியில் கிறிஸ் லின் மட்டும் அவுட் ஆஃப் ஃபார்மில் உள்ளார். அவரும் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புள்ளி பட்டியல்:
கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பெங்களுர் அணி விளையாடிய 4 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

எதிர்பார்க்கப்படும் பேட்ஸ்மேன்கள்: ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ்.

எதிர்பார்க்கப்படும் பவுலர்கள்: யுகேந்திர சகால், குல்தீப் யாதவ்,

நேருக்கு நேர் : இதுவரை பெங்களுர் மற்றும் கொல்கத்தா அணிகள் 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14 போட்டியில் கொல்கத்தாவும், 9 போட்டிகளில் பெங்களுர் அணி லெற்றி பெற்றுள்ளது.

10 முறை இரு அணிகளும் சின்ன சுவாமி மைதானத்தில் மோதியுள்ளன. இதில் 6 போட்டிகளை கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது.

மைதானம்: இன்றைய போட்டி பெங்களுர் சின்ன சுவாமி மைதானத்தில் மோதுகின்றன. மைதானம் பேட்டிங்கிற்கு உதவும் என்பதால் 180+ ரன்களை எதிர் பார்க்கலாம்.

மாற்றங்கள் : கொல்கத்தா அணியின் சுனில் நரைனும், பெங்களுர் அணியில் டிம் சவுத்தி மற்றும் வாசிங்டன் சுந்தரை எதிர்பார்க்கலாம்.

வெற்றி யாருக்கு: இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற தான் அதிக வாய்ப்பு உள்ளது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.