இரண்டு அதிரடி மாற்றத்துடன் மரண மாஸாய் களம் இறங்கும் பெங்களுர் அணி

ஐ.பி.எல் 12வது தொடரின் 17 வது லீக் போட்டியில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று இரவு 8 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள பெங்களுர் அணி பிளே ஆஃப் வாய்ப்பை நழுவவிடாமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம்.

இன்றைய போட்டியை வெல்ல பெங்களுர் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

முதல் நான்கு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி வரும் சிம்ரான் ஹெட்மயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகிய இருவரும் நீக்கப்படுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களுக்கு மாற்றாக வாசிங்டன் சுந்தர் மற்றும் டிம் சவுத்தி ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் பெங்களுர் அணி: பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), மொபிம் அலி, விராட் சோலி, ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சிவம் துபே, வாசிங்டன் சுந்தர், யுகேந்திர சகால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், டிம் சவுத்தி.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.