ஒரே ஒரு அதிரடி மாற்றத்துடன் களம் இறங்கும் கொல்கத்தா அணி

இன்று இரவு 8 மணிக்கு சின்னசாமி மைதாதானத்தில் நடைபெறும் போட்டியில் பலமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் எதிர் கொள்கிறது பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 2ல் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது.

கொல்கத்தா அணியை பொறுத்த வரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து பிரிவிலும் சமபலத்தில் உள்ளது. அந்த அணியில் கிறிஸ் லின் மட்டும் அவுட் அஃப் ஃபார்மில் உள்ளார். இருந்தாலும் அவருக்கு இன்றைய போட்டியில் மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்.

அதே சமயம் டெல்லி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் காயம் காரணமாக நீக்கப்பட்ட சுனில் நரைன் இந்த போட்டியில் மீண்டும் களம் இறங்குவார் என எதிர் பாரக்கப்படுகறது.

எதிர்பார்க்கப்படும் கொல்த்தா அணி : சுனில் நரைன், கிறிஸ் லின், நிதிஷ் ரானா, ராபின் உத்தப்பா, ஷுப்மன் கில், தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆன்ரே ரஸல், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, லூக்கி பெர்குசன், பிரதீப் கிருஷ்ணா.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.