சோதனைக்கு உள்ளாகும் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

ஹைதராபாத் அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் மூன்றை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதுவரை அந்த அணியின் வெற்றிக்கு காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டமும், பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சு தான்.

அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான வார்னர் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோரின் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், அதன் பின் விஜய் சங்கரின் அடிக்கும் 30 ரன்களாலும் ஹைதராபாத் அணி பெரிய ஸ்கோர் அடிக்க உதவியது. இதனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ஆட்டம் ஆட வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை 129/5 ரன்களுக்கு சுருட்டியது ஹைதராபாத் அணி. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு பேர்ஸ்டோ அதிரடி தொடக்கம் தந்தார்.

இதனால் அந்த அணி 6 ஓவரில் 62 ரன்களை குவித்தது. இதனையடுத்து பேர்ஸ்டோ (48), வார்னர் (10), விஜய் சங்கர் (16) என அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் மீதமுள்ள ரன்னை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

இதனையடுத்து வந்த மனிஷ் பாண்டே (10), தீபக் ஹூடா (10) ரன் என பெவிலியன் திரும்பினர். இதனால் எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியை 18.3 ஓவரில் வெற்றி பெற்றது.இறுதியில் பதான் 9 ரன் மற்றும் நபி 17 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் போது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 40 ரன்களை கூட அடிக்க முடியாமல் திணறுவது ஹைதராபாத் அணிக்கு நல்லதல்ல. வருங்காலங்களில் இதை சரி செய்ய வில்லை எனில் அந்த அணி தோல்வியை சந்திக்க நேரிடும்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.