டி வில்லியர்ஸ் ஒரு ஆளே இல்லை எளிதில் அவுட்டாக்கி விடுவேன் பேட்டியளித்த பியூஷ் சாவ்லா

இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி .

இந்நிலையில் இன்று இரவு நடை பெற உள்ள போட்டி குறித்து கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீசசாளர் பியூஸ் சாவ்லா கூறியதாவது.,

விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் உலகில் மிக அபாயகரமான வீரர்கள். இவர்கள் இருவரும் ஓர் அணியில் இணைந்து விளையாடும் போது இவர்களது விக்கெட்டை விரைவில் எடுக்க வேண்டும். இல்லையென்றால் போட்டியின் நிலையை தலைகீழாக மாற்றி விடுவார்கள்.

தற்போது பெங்களுர் அணி தொடர் தோல்விகளால் மனம் நொந்து போய் உள்ளது. எனவே அந்த அணி வீரர்களுக்கு எதிராக சில அடிப்படை தந்திரங்கள் செய்தால் போதும் விக்கெட்டுகள் அடுத்தடுத்து கிடைக்கும்.

ஏபி டி வில்லியர்ஸை அதிக முறை விக்கெட் எடுத்துள்ளேன். இம்முறையும் அவரை எளிதில் வீழ்த்தி விடுவேன். அது மிக எளிய விஷயம் திட்டம் என்னிடம் உள்ளது. விராட் கோலிக்கு அவுட்டாகவும் திட்டம் வைத்துள்ளோம் என கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.