டெல்லி அணி இந்த ஒன்றை செய்தால் மிக எளிதில் வெற்றி பெறலாம்

டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை விளையாடி 5 போட்டியில் இரண்டில் வெற்றியும் மூன்றில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் டெல்லி அணிக்கு இந்தாண்டும் மிகவும் மோசமாதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி அணியின் தொடர் தோல்விக்கு காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான். இதனால் பவுலர்கள் சிறப்பாக Uந்து வீசியும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. எனவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் களம் இறங்கும் இடங்களில் சிறிய மாற்றம் தேவைப்படுகிறது.

எந்த ஒரு அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமைந்தால் தான் பின் வரிசை வீரர்கள் அதிரடியாக ஆடி அதிக ரன்களை குவிக்க முடியும். அது போன்ற தொடக்கம் டெல்லி அணிக்கு இதுவரை அமையவில்லை.

நடந்து முடிந்துள்ள 5 போட்டியில் பிரித்வி ஷா மற்றும் தவான் ஜோடியின் ஆவரேஜ் தொடக்கம் 18 ரன்கள் மட்டுமே. பிரித்திவி ஷா பெரிய ஷாட் ஆட நினைத்து அவுட்டாகிறார். அதே சமயம் தவான் பெரிய ஷாட் ஆட முடியாமல் தினறுகிறார். ஆனால் தவான் தட்டு தடுமாறி 30 அல்லது 40 ரன்கறை சேர்த்து விடுகிறார். இருவரும் அவுட் ஆஃப் ஃபார்ம்.

எனவே பிரித்வி ஷா -தவான் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக களப் இறக்காமல், காலின் இங்ரம் -தவான் ஆகியோரை களம் இறக்கி பரிசோதனை செய்யலாம் .

இங்ரம் சமீபத்தில் நடந்த கரீபியன் லீக், பிக்பாஷ் லீக்கில் நல்ல ஃபார்மில் இருந்தார். நேற்றைய போட்டியை தவிர மற்ற போட்டிகளில் டீசன்ட்டாக ஆடியுள்ளார்.

எனவே இவர்கள் இருவரையும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்கினால், இங்ரம் அதிரடியாக ஆட, அதே சமயம் தவான் நிதானமாக ஆட டெல்லி அணிக்கு நல்ல தொடக்கம் தர வாய்ப்பு உள்ளது. பிரித்வி ஷாவை 3வதாக களம் இறக்கலாம். பண்டை 4 வதாக களம் இறக்காமல் ஃபினிசராக களம் இறக்கினால் நல்ல பலனை தரும்.

பேட்டிங் ஆர்டர்: காலின் இங்ரம், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பண்ட், கிறிஸ் மாரிஸ்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.