டெல்லி அணி தோல்வி அடைந்தற்கான 3 முக்கிய காரணங்கள் இது தான்

நேற்று நடைபெற்ற போட்டியில் இளம் டெல்லி அணி பலமான ஹைதராபாத் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொண்டது.

இப்போட்டியில் வார்னர் மேர்ஸ்டோ, பண்ட் இங்ரம் என பல அதிரடி வீரர்கள் இருந்ததால் போட்டி விறுவிறுப்பாகவும், சுவாரஷ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போட்டியில் நடந்ததே வேறு, டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்னில் அடுத்தடுத்து அவுட்டாரினர். அதே போல் வார்னரும் நேற்று சோபிக்கவில்லை. இதனால் நேற்றைய போட்டி சுவாரஷ்யம் இல்லாத மொக்கை போட்டியாக அமைந்தது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட் சீட்டு கட்டு போல் சரிய, ஒரு முனையில் நிதானமாக ஆடிய ஸ்ரேயாஷ் ஐயர் 43 ரன்களை எடுத்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் பேர்ஸ்டோ (48) அதிரடி காட்ட அந்த அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது. டெல்லி மீண்டும் படு தோல்வி அடைந்தது.

இந்நிலையில் டெல்லி அணி நேற்று தோல்வி அடைந்தற்கான 3 முக்கிய காரணங்களை பார்ப்போம்.

வேகம் தந்த சோகம்:
நேற்றைய டெல்லி மைதானம் மெதுவாக பந்து வீசும் பவுலர்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. இதனை முதல் ஓவரிலே உணர்ந்த ஹைதராபாத் அணி பவுலர்கள் மிகவும் மெதுவாக பந்து வீசினார்கள்.

அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 110, 120, 125 என குறைந்த வேகத்தை மட்டும் கூட்டி குறைத்து, கூட்டி குறைத்து என டெல்லி அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் தான் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை மெதுவாக தூக்கி போட்டு விக்கெட்டை எடுத்தனர்.

ஆனால் டெல்லி பவுலர்கள் ஆரம்பம் முதலே அதிவேகமாக பந்து வீசினர். கிறிஸ் மாரிஸ், ரபாடா ஆகியோர் 140க்கு மேல் பந்துகளை வீசினர். இந்த வேகத்தை சரியாக பயன்படுத்திய பே்ரஸ்டோ வெளுத்து வாங்கினார்.

மைதானத்தை Uற்றி தாமதமாக உணர்ந்த டெல்லி பவுலர்கள் கடைசி 11 ஓவர்களை மெதுவாக வீசினர். இதனால் தான் போட்டி 19வது ஓவர் வரை சென்றது.

பீல்டிங்கில் கோட்டை:
அக்சர் படேல் வீசிய இரண்டாவது ஓவரில் ஜானி பேரஸ்டோ கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார் அக்சர படேல். இந்த கேட்சை பிடித்திருந்தால் போட்டியின் மொத்த உருவமே மாறி இருக்கும். இந்த கேட்ச் மட்டுமில்லை தீபக் ஹூடா, வார்னர் என 3 கேட்சுகளை கோட்டை விட்டனர்.

அமித் மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மா:
டெல்லி மைதானத்தில் அதிக கிரிக்கெட் விளையாடியவர்கள் அமித் மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர். இருவரும் மைதானத்தை பற்றி அதிகம் அறிந்தவர்கள்.

ஆனால் நேற்றைய போட்டியில் அமித் மிஸ்ரா அணியில் எடுக்கவில்லை. அவரை கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும். அதே போல் இஷாந்த் ஷர்மாவை முதல் 6 ஓவர்களில் பந்துவீச வைத்திருக்க வேண்டும்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.