அவரை பார்த்தால் பயமாக உள்ளது பென் ஸ்டோக்ஸ் பரபரப்பு பேட்டி

நேற்று பெங்களுர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆன்ரே ரஸல் 13 பந்துகளில் 48 ரன்களை அடித்து அசத்தினார். இதனால் தோல்வி அடைய வேண்டிய கொல்கத்தா அணி 19.1 ஓவரில் 206 ரன்களை எளிதில் எட்டி வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது., நேற்றைய போட்டியில் ஆன்ரே ரஸலின் ஆட்டத்தை நான் பார்த்தேன். நம்பவே முடியவில்லை. இது போன்ற ஆட்டத்தை யாரிடமும் நான் பார்த்தது இல்லை. நாளை நாங்கள் கொல்கத்தா அணியுடன் நாங்கள் மோதுகிறோம். எனக்கு பயமாக உள்ளது அவரை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.

இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் ராஜஸ்தான் அணிக்கு இதுவரை சிறப்பாக அமையவில்லை. ஒரே ஒரு வெற்றி தான் பெற்றுள்ளோம். புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண கொல்கத்தா அணிக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். கொல்கத்தா தற்போது அபாயகரமான அணியாக உள்ளது. நல்ல விஷயம் சஞ்சு சாம்சனுக்கு காயம் குணமடைந்து விட்டது. நாளைய போட்டியில் பங்கேற்பார் என அவர் தெரிவித்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.