கண்ணு பாக்குது கை விளையாடுது காட்டடி அடித்த ஆன்ரே ரஸல் அதிரடி பேட்டி

எனது கண் பார்க்கிறது கை விளையாடுகிறது என்று நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆன்ரே ரஸல் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பெங்களுர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களுர் அணியில் விராட் கோலி |84), டிவில்லியர்ஸ் (63), ஸ்டாய்னிஷ் (28) அதிரடி காட்ட, பெங்களுர் அணியின் ஸ்கோர் 20 ஓவர் முடிவில் 205/3 என எகிறியது.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக விளையஷனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் கடைசி 3 ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பேட் செய்ய வந்த ஆன்ரே ரஸல், தனது அரக்கதனமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் 13 பந்தில் 7 சிக்சர் மற்றும் 1 பவுண்டரியுடன் 48 ரன்களை குவித்தார். இதனால் கொல்கத்தா 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

போட்டி முடிந்ததும் தனது பேட்டிங் குறித்து ஆன்ரே ரஸல் பேட்டியளித்ததாவது.

எந்த மைதானத்திலும் வெற்றி பெற 20 பந்துகளில் 68 ரன்கள் அடிப்பது மிகவும் கடினம். இது போன்ற கழல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த சூழ்நிலையில் என் மீது என் அணியினர் அதிக நம்பிக்கை வைத்தனர். அதை விட பல மடங்கு என் பேட்டிங்கின் மீது நான் நம்பிக்கை வைத்தேன்.

நான் டக் அவுட்டில் இருந்து பந்து பேட்டிற்கு எப்படி வருகிறது என்பதை டிவி வழியாக கூர்ந்து கவனித்து கொண்டிருந்தேன். பேட்டிங்கிற்கு காத்திருந்தேன். பின் களம் இறங்கினேன். என் கண் பந்தை பார்த்தது, கை பெரிய ஷாட்டுகளை ஆடியது. அவ்வளவுதான் போட்டி 19.1 ஓவரில் முடிவடைந்தது.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.