கதறி அழுத கோலி தோல்விக்கு எனது அணியில் இருக்கும் அவர் தான் காரணம்

கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு டிம் சவுத்தி தான் காரணம் என பெங்களுர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களுர் அணி 20 ஓவர் முடிவில் 205 ரன்கைளை குவித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி (84), டி வில்லியர்ஸ் (63), மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் (28) ரன்களை குவிந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் ( ) , ராபி உத்தப்பா (), நிதிஷ் ரானா () சிறப்பாக ஆடினர். இருந்தாலும் அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்தில் 53 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த சூழ்நிலையில் களம் இறங்கிய ரஸல் 13 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்சர் 1 பவுண்டரிகள் அடங்கும். இதனால் கொல்க்ததா அணி 19.1 ஓவரில் 206/5 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின் பேட்டியளித்த விராட் கோலி தோல்வி குறித்து கூறியதாவது. இன்று நாங்கள் அடைந்த தோல்வியை ஏற்று கொள்ள முடியாது. எங்கள் மனம் சுக்கு நூறாய் உடைந்து போய் உள்ளது. இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். 205 ரன்களையும் குவித்தனர்.

எந்த மைதானத்திலும் 200+ ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். ஆனால் இப்படி பந்து வீசினால் தோல்வி தான் அடைய முடியும். முகமது சிராஜ் மீது அதிக நம்பிக்கை வைத்தேன். என்னை எமாற்றி விட்டார். நாங்கள் பல நல்ல கேட்சுகளையும் கோட்டை விட்டோம், பில்டிங்கிலும் சொதப்பினோம்.

மேலும் டிம் சவுத்தி போன்ற வீரர்கள் முதல் ஓவரில் இருந்து மோசமாக வீசினால் நான் என்ன செய்ய முடியும். யாரை குறை சொல்ல முடியும். இந்த தோல்விக்கு டிம் சவுத்தி தான் பொறுப்பேற்க வேண்டும்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.