கவலை வேண்டாம் கோலி இன்னும் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது ஆறுதல் கூறிய கேரி கிறிஸ்டன்.

கவலை வேண்டாம் இன்னும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள விராட் கோலிக்கு ஆறுதல் கூறியுள்ளார் பெங்களுர் அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்.

கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது பயிற்சியாளராக இருந்தவர் தென்னாப்ரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன். அவர் தான் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுர் அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களின் மோசமான பந்து வீச்சால் கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது.

இது பெங்களுர் அணியின் 5 வது தொடர் தோல்வியாகும். முதல் ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் கோலி மற்றும் பெங்களுர் அணியின் அனைத்து வீரர்களும் தற்போது சோகத்தில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அந்த அணியின் பயிற்சி கேரி கிறிஸ்டன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, எந்த ஒரு அணிக்கும் இது போன்ற தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வருவது மிக கடினமான ஒன்று. இது போன்ற தோல்விகள் எதிர்பார்க்காதது. இந்த தோல்வியில் இருந்து வீரர்கள் இயல்பு நிலைக்கு உடனடியாக திரும்ப வேண்டியது அவசியம்.

நான் கோலிக்கு சொல்வதெல்லாம் ஒன்று தான். நாம் மும்பை இந்தியன்ஸ் அணியை உதாரணமாக எடுத்து கொள்வோம். நாம் முயற்சி செய்தால் இனி வரும் 9 போட்டிகளை வென்று கோப்பையை கைப்பற்றலாம். எந்த கவலையும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.