சென்னையை வதம் செய்ய பஞ்சாப் களம் இறக்கும் இரண்டு அசுர வீரர்கள் தாக்கு பிடிக்குமா சென்னை

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றனர். இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் மோதும் இரு அணிகளும் விளையாடி 4 போட்டிகளில் மூன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளன. இவ்விரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முந்தைய போட்டியில் டெல்லி அணியை பந்தாடிய பஞ்சாப் அணி அதே உத்வேகத்துடன் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ள அணியில் .இன்று சென்னை மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் இரண்டு மாற்றங்கள் சென்னை அணியில் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

டெல்லி அணிக்கு எதிராக காயம் காரணமாக நீக்கப்பட்ட கிறிஸ் கெய்ல் இன்றைய போட்டியில் இருப்பார். அதே சமயம் சென்னை மைதானம் சுழற் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் தமிழக வீரர் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அணியில் இடம் பெறலாம்.

இவ்விருவரும் பஞ்சாப் அணியில் இடம் பெறும் பட்சத்தில் சென்னை அணிக்கு இன்றைய போட்டி சவாலாக தான் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எதிர்பார்க்கப்படும் பஞ்சாப் அணி: கிறிஸ் கெய்ல், கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், சர்ப்ராஷ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சாம் கர்ரன், ஹர்ட்ஸ் வில்ஜோன், ரலி சந்திரன் அஸ்வின் (கேப்டன்), வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.