சென்னை அணியில் இரண்டே மாற்றம் தோல்வியை சந்திக்க போகும் பஞ்சாப்

இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக் மைதானத்தில் தோனியின் சென்னை ஆப்பர் கிங்ஸ் மற்றும் அஸ்வினின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணியில் இருந்து பிரிந்து சென்ற அஸ்வின், தற்போதுபஞ்சாப் அணிலின் கேப்டனாக தோனியை எதிர்த்து இன்றைய போட்டியில் மோத உள்ளார். சென்னை அணி மற்றும் தோனியின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்தவர் அஸ்வின். இதனால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.

சென்னை அணி முந்தைய போட்டியில் மும்பை அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் தனது அணிக்கு எந்த இடத்தில் பிரச்சனை உள்ளது என்பதை தோனி உணர்ந்திருப்பார். அதை இப்போட்டியில் சரி செய்ய முயற்சிப்பார்.

அம்பத்தி ராயுடு, வாட்சன் ஜோடி தொடர்ந்து எமாற்றத்தையே தந்து வருகிறது. இருந்தாலும் இன்றைய போட்டியில் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பிராவோக்கு காயம் ஏற்ப்பட்டது. இதனால் இன்றைய போட்டியில் அவர் இடம் பெற மாட்டார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அணியின் பந்து வீச்சு பகுதியில் பல மாற்றங்கள் இன்றைய போட்டியில் எதிர் பார்க்கலாம். அதன்படி பிராவோக்கு மாற்றாக ஸ்காட் குகேஜிலினும், சர்துல் தாக்கூர்க்கு மாற்றாக ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம் பெறுவார்கள். இன்றைய போட்டியில் சென்னை அணியில் பல அனுபவ சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாட உள்ளதால் பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு தான்.

எதிர்பார்க்கப்படும் சென்னை அணி : அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், தோனி (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஸ்காட் குகேஜிலின், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், மோகித் சர்மா, தீபக் சாஹர் .

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.