சேப்பாக் மைதானத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை செய்தார்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையோன போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்ய முடிவு எடுத்தது. இன்றைய போட்டியில் அம்பத்தி ராயுடுவுக்கு மாற்றாக பாஃப் டூ பிளசிஸ் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்.

டூ பிளசிஸ் மற்றும் வாட்சன் ஜோடி சென்னை அணிக்கு சுமாரான தொடக்கம் தந்தனர். வாட்சன் |26), டூ பிளசிஸ் (54), ரெய்னா (17) ரன்களில் அடுத்தடுத்து அஸ்வினின் பந்தில் அவுட்டாகினர்.

இதனையடுத்து வந்த தோனி அதிரடி காட்டினார். தோனி 23 பந்தில் 37 ரன்களை குவித்தார். ராயுடு 21 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை குவித்தது

இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 23 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்த போட்டியில் அஸ்வின் டூ பிளசிஸின் விக்கெட்டை எடுத்த போது, ஐ.பி.எல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரவி சந்திரன் அஸ்வின்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் அஸ்வின் 51 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், பிராவோ 48 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.