அவரு மட்டும் இல்லைன்னா தோல்வி தான் கிடைச்சிருக்கும் தல தோனி அதிரடி பேட்டி

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சென்னை அணியில் வாட்சன் 26 ரன்னுக்கு அவுட்டாக, சிறப்பாக விளையாடிய டுபிளெசிஸ் (54) அரைசதம் கடந்தார். வழக்கம் போல் தோனி டெத் ஓவரில் அதிரடி காட்ட சென்னை அணியின் 20 ஓவர் முடிவில் 160 ரன்களை எட்டியது.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், கிறிஸ் கெய்ல் 5 ரன்னுக்கும் மற்றும் மயங்க் அகர்வால் 0 ரன்னுக்கும் அடுத்தடுத்து அவுட்டாக்கினார் ஹர்பஜன் சிங். இதனையடுத்து கே.எல் ராகுலும் சர்ஃபராஸ் கானும் அரைசதம் கடந்தாலும் பஞ்சாப் அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்த பின் பேட்டி wளித்த தோனி கூறியதாவது., நாங்கள் கிறிஸ் கெய்ல் விக்கெட்டை விரைவில் வீழ்த்தி விட்டோம். கெய்ல் நின்றிருந்தால் 200 ரன்களை கூட எளிதில் சேஸ் செய்துவிடுவார். எனக்கு தெரியும் 160 ரன்கள் என்பது வெற்றி பெற போதுமான இலக்கு அல்ல.

ஆனால் ஹர்பஜன் சிங் அடுத்தடுத்து இரண்டு முக்கிய லிக்கெட்டுகளை சாய்த்தார். இந்த இரண்டு விக்கெட்டுகள் விழாவிட்டால் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஹர்பஜன் சிங் தான் ஆட்டத்திற்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவர் இல்லைனா இன்றைய போட்டியை வென்றிருக்க முடியாது என தோனி கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.