இதுவரை ஐ.பி.எல் வரலாற்றில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் தொடர் 2019ம் ஆண்டு தற்போது வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.இந்த 12 ஆண்டுகளில் ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

அல்ஜாரி ஜோசப்:
நேற்று  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில்  மும்பை வீரர் அல்ஜாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தினார். இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சோகைல் தன்வீர்:
கடந்த 2008ம் ஆண்டு சென்னை சூப்பர கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய போது, ராஜஸ்தான் அணியின் வீரர் சோகைல் தன்வீர் 6 விக்கெட் வீழ்த்தினார். இப்போட்டியில் 4 ஒவர்கள் வீசிய தன்வீர் 17 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இப்போட்டியில் சென்னையை 8 விக்கிகட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்.

ஆடம் ஜாம்பா :
கடந்த 2016ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக புனே சூப்பர் ஜெயன்ட் அணி விளையாடிய போது, புனே வீரர் ஆடம் ஜாம்பா 6 விக்கெட் வீழ்த்தினார். இப்போட்டியில் 4 ஒலர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் லிட்டு கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இப்போட்டியில் புனே அணி தோல்வியடைந்தது..

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.