ஐ.பி.எல் தொடரில் 50 பந்துகளுக்கு மேல் சந்தித்து அரைசதம் அடித்த 5 வீரர்கள்

ஐ.பி.எல் டி20 போட்டிகள் என்றாலே மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடிக்க தான் வீரர்கள் விரும்புவார்கள். ஆனால் சில வீரர்கள் அரைசதம் கடக்க மிக அதிக பந்துகள் எடுத்து கொள்வார்கள். அதே போல் ஐ.பி.எல் வரலாற்றில் அரைசதம் கடக்க அதிக பந்துகளை எடுத்து கொண்ட டாப் 5 வீரர்கள் பெயர் பட்டியல் இடப்பட்டுள்ளது.

கவுதம் கம்பீர் :

இந்த பட்டியலில் 5 வது இடத்தில் இருப்பவர் கவுதம் கம்பீர்.ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் 4000 nண்களுக்கு மேல் குவித்துள்ள கவுதம் கம்பீர், கடந்த 2010ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான போட்டியின் போது 51 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

பிரன்டான் மெக்கல்லாம்:

இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவர் பிரன்டான் மெக்கல்லாம், உலகம் முழுவதும் சிறந்த டி20 வீரராக அறியப்படுபவர் பிரன்டான் மெக்கல்லாம். இவர் கடந்த 2010ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 52 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

ராபின் உத்தப்பா:

இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவர் ராபின் உத்தப்பா. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக விளங்கும் ராபின் உத்தப்பா, கடந்த 2012ம் ஆண்டு  டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 52 பந்தில் அரைசதம் அடித்தார்.

பார்த்திவ் படேல்:

இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் பார்த்திவ் படேல். கடந்த 2010ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பார்த்திவ் படேல் 53 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

ஜே.பி டுமினி:

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஜே.பி டுமினி. கடந்த 2009ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 55 பந்துகளில் அரைசதம் கடந்தார் ஜே.பி டுமினி.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.