சென்னை அணி வெற்றி பெற்றதற்கு இதுதான் மிக முக்கிய காரணம்

நேற்று நடைபெற்ற போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இப்போட்டியில் தோனி கே.எல் ராகுலை ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக ராகுல் ரன் அவுட்டில் இருந்து தப்பினார். இந்த ரன் அவுட் மிஸ் தான் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

பஞ்சாப் அணி பேட்டிங்கின் போது, 13வது ஓவரின் 4வது பந்தை ஜடேஜா வீசினார். இந்த பந்தை தோனியின் பக்கவாட்டில் அடித்து விட்டு ரன் ஓட முயற்சி செய்தார் கே.எல் ராகுல்.

ஆனால் மின்னல் வேகத்தில் செயல்பட்ட தோனி பந்தை எடுத்து ஸ்டம்ப் நோக்கி எறிந்தார். பந்து ஸ்டம்பில் பட்டது. ஸ்டம்ப் லைட் எரிந்தது. ஆனால் பெய்ல்ஸ் மட்டும் கீழே விழவில்லை. உடனே ராகுல் க்ரிஸ்க்குள் வந்துவிட்டார்.

உடனே இந்த ரன் அவுட் கள நடுவரால் ரிவ்யூ செய்யப்பட்டது. டி.வி ரீப்ளேவில் ஸ்டெம்ப் பெய்ல்ல் எழும்பாதது தெளிவாக தெரிந்தது. இதனால் கே.எல் ராகுலுக்கு நாட் அவுட் தரப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து ஆடிய ராகுல் அரைசதம் கடந்தார்.

இப்போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் சர்ப்ராஷ் கான் ஆகிய இருவரும் ஆமையை விட மெதுவாக பேட்டிங் செய்தனர். இதனால் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது.

ஒரு வேளை 13வது ஓவரில் கே.எல் ராகுல் அவுட்டாகி இருந்தால், மில்லர், மந்தீப் சிங் ஆகியோர் அதிரடி காட்டி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றிருப்பார்கள். ஆனால் அதற்கு வழியில்லாமல் செய்துவிட்டது கே.எல் ராகுல் ரன் அவுட் மிஸ்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.