திட்டி தீர்த்த தோனி அமைதியான மைதாைனம் அடுத்து நடந்த சிறப்பான சம்பவம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை தோனி திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை ரசிகர்கள் செல்லமாக கேப்டன் கூல் என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் போட்டியின் போது எந்த இக்கட்டான சூழல் நிலவினாலும் தனது அமைதியையும் நிதானத்தையும் இழக்கமாட்டார். வீரர்களின் மீது கோபத்தையோ எரிச்சலையோ காட்டமாட்டர்.

ஆனால் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி வெற்றி பெற 12 பந்தில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீச தீபக் சஹாரை அழைத்தார் தோனி.

19 வது ஒவரின் முதல் பந்தை இரண்டு முறை புல் டாஸாக வீசினார் தீபக் சாஹர். இரண்டு பந்தும் இடுப்புக்கு மேல் புல் டாஸாக சென்றதால் நடுவர் நோ பால் என அறிவித்து ஃபிரி ஹிட் கொடுத்தார்.

சஹார் தொடர்ந்து இரண்டு பந்துகளை நோ பாலாக வீசியதால் அதிருப்தி அடைந்தார் தோனி. மிக வேகமாக நடந்து சஹார் அருகில் சென்றார். முகத்தில் கோபம் தெறிக்க தீபக் சஹார்க்கு அறிவுரை வழங்கினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தோனி அறிவுரை சொல்லும் போது தீபக் சஹார் முகத்தில் பதற்றத்தையும், பயத்தையும் பார்க்க முடிந்தது. இதனை தொடர்ந்து வீசிய அடுத்த 6 பந்தில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து சஹார் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். இதனையடுத்து பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

தற்போது இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.