ரோகித் சர்மாவை கட்டி பிடித்து கதறி அழும் ரசிகர் வைரலாகும் பரபரப்பு வீடியோ

ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவை சந்தித்த பின் கட்டிபிடித்து அழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் தங்கள் ரசிகர்களுடன் ஒட்டி உறவாடும் அணி. அதனால் அந்த அணியின் ரசிகர் பட்டாளம் மும்பை மட்டும் இல்லாது நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளது.

மும்பை அணி எப்போதும் தங்கள் செயல்பாடுகளில் ரசிகர்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என விரும்பும். அதனால் மும்பை அணி வீரர்களை ரசிகர்கள் சந்திக்க சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து தரும்.

இது போன்ற நிகழ்வுகளில் ரசிகர்கள் தங்கள் மனம் விரும்பிய நட்சத்திர வீரர்களை சந்திக்கும் போது சில நெகிழ்வான விஷயங்கள் நடக்கும். அது போன்ற சம்பவம் வான்கடே மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

நேற்று மும்பை அணியின் தீவிர ரசிகர்கள் சிலர், மும்பை அணியின் ஓனர் நீபா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரை சந்தித்தனர்.

அதில் ஒரு ரசிகர் ரோகித் சர்மாவை அருகில் பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டார். ரோகித் சர்மாவை கட்டி பிடித்து கை குழுக்கினார். பின் சந்தோசத்தில் கண்ணீர் விட்டு அழுதார். பின் அவரை சமாதானப்படுத்தி ரோகித் சர்மா வழி அனுப்பி வைத்தார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.