ஆன்ரே ரஸலை நான் தான் அவுட் செய்ய போறேன் சவால் விட்ட ஹர்பஜன் சிங்

நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

இப்போட்டியில் சென்னை அணிக்கு சவாலாக இருக்க போவது ஆன்ரே ரஸல் தான். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள ரஸல் 207 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் அவரது ஸ்ரைக் ரேட் 269 ஆகும். பெத் ஓலர்களில் மிக அபாயகரமான வீரராக உள்ளார்.

ஆன்ரே ரஸலை சென்னை அணி எப்படி சமாளிக்க போகிறது? உங்களுக்கு ரஸ்லை பார்த்தால் பயமாக இல்லையா என்ற கேள்வி ஹர்பஜன் சிங்கிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது.

ரஸல் போன்ற வீரர்களின் விக்கெட்டை எடுப்பதற்கு தான் சென்னை அணி என்னை வைத்துள்ளது. 20 வருடங்களுக்கு மேல் நான் டாப் லெவல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இதுவரை எந்த வீரரையும் பார்த்து பயந்தது இல்லை.

எனக்கு ரஸலை பார்த்து பயம் ஒன்றும் இல்லை. அவரை வீழ்த்த என்னிடம் திட்டம் உள்ளது. மேலும் எங்களிடம் தோனி உள்ளார். தோனியின் கள வியூகத்தை தாண்டி ரஸலால் விளையாட முடியாது . அவரது விக்கெட்டை நாளை நான் தான் வீழ்த்த போறேன் என தெரிவித்துள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.