எந்த அணி பிடிக்கும் சென்னையா மும்பையா ஹர்பஜன் அதிரடி பதில்

தொடர்ந்து 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங்கை, கடந்த 2018ம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தின் போது கழட்டிவிட்டது மும்பை அணி . இதனால் அதே ஏலத்தில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்தாண்டு சென்னை அணிக்காக 3 போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் சிங் இரண்டு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரைம் ஃபார்மில் உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என இரண்டு அணியில் விளையாடி இருக்கிறீர்கள் எந்த அணியில் விளையாடும் போது செளகரியமாக உணர்கிறீர்கள் என்ற கேள்வி ஹர்பஜனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்.,

நான் எப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். அந்த அணியை மதிக்கிறேன். எப்போதும் மும்பை அணிக்காக விளையாடும் போது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற அழுத்தம் அதிகம் இருக்கும். ஆனால் சென்னை அணியில் அப்படியில்லை. வெற்றி பெற்றாலும் தோற்றாலும் எந்த அழுத்தமும் வீரர்கள் மீது இருக்காது. சென்னை அணி கேப்டன் கூல் தலைமையில் கூலாக உள்ளது. எனக்கு சென்னை தான் பிடித்திருக்கிறது என்றார்.

மேலும் நான் தற்போது இந்திய அணிக்காக விளையாட முழு உடற்தகுதி மற்றும் விரும்பத்துடன் உள்ளேன். என்னை உலக கோப்பை அணியில் எடுத்தால் சிறப்பாக விளையாடுவேன்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.