கோலி ஒரு அப்பிரண்டீஸ் கம்பீரின் சாட்டையடி விமர்சனத்தால் புதிய சர்ச்சை

தொடர்ந்து பெங்களுர் அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுக்காமல் இருக்கும் விராட் கோலி எப்படி தான் இன்னும் கேப்டன் பதவியில் நீடிக்கிறாரோ? என்று இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் தொடங்கும் முன்பே கோலியின் மீது தனது கடுமையான லிமர்சனத்தை முன் வைத்தார் கவுதம் கம்பீர்.

அதன்படியே விராட் கோலி தலைமையிலான பெங்களுர் அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு கம்பீர் எழுதியுள்ள கட்டுரையில் விராட் கோலியை இன்னும் ஒருபடி மேல் சென்று விமர்சனம் செய்துள்ளார்.

” விராட் கோலி என்ற பேட்ஸ்மேன் பேட்டிங்கில் மாஸ்டர். ஆனால் விராட் கோலி என்ற கேப்டன் ஒரு அப்பிரண்டீஸ். கோலி கேப்டன்சிபில் இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறையும் பவுலர்களை குறை சொல்வதை விட்டு தானே குற்றங்களை ஏற்று கொள்ள வேண்டும்.

அந்த அணியின் தவறுகள் எங்கே தொடங்கியது என்பது குறித்து எழுதியுள்ள கம்பீர். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தான் தவறுகள் தொடங்கியது. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நேதன் குல்டர் நைல் போன்ற வீரர்கள் தொடக்கம் முதல் ஐ பி எல் விளையாட முடியாது என தெரிந்தும் ஐ.பி.எல் ஏலத்தில் அவர்களை ஏன் வாங்கினார்கள்.

பெங்களுர் அணியின் மைதானம் (சின்ன சுவாமி மைதானம்) தட்டையாகவும் சிறிதாகவும் இருக்கும் போது முழுமையான வேகப் பந்து வீச்சாளரை வாங்காமல் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற ஆல் ரவுண்டரை ஏன் வாங்சினார்கள் ஏன் வாங்கினார்கள் என கட்டுரையில் எழுதியுள்ளார்.

பல முன்னாள் இந்திய வீரர்களும் விராட் கோலியை தேரடியாக விமர்சிக்க தயங்கும் போது, கம்பீரின் நேரடி லிமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.”

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.