ஜப்பானை போல் சி.எஸ்.கே ரசிகர்கள் செய்த செயல் பாராட்டி தள்ளிய சின்ன தல

கடந்த 2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியிடம் படுதோல்வி அடைந்தது ஜப்பான் அணி. போட்டியில் ஜப்பான் தோற்றாலும் மைதானத்தை சுத்தம் செய்து குப்பைகளை அகற்றினார்கள் அந்த அணி ரசிகர்கள்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி அனைத்து தரப்பு விளையாட்டு ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்றது. இது போன்ற சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர் சி.எஸ்.கே ரசிகர்கள்.

மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்த பின், பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை அணி. இந்த வெற்றியை மைதானத்தில் கொண்டாடிய ரசிகர்கள் குப்பைகளை அப்படியே விட்டு சென்றனர்.

மைதானத்தில் அதிக குப்பைகளை கண்ட ஒரு சில சென்னை ரசிகர்கள் இணைந்து, மைதானத்தில் இருந்த அனைத்து குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்தனர். இதனை கண்ட சுரேஷ் ரெய்னா புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் தூய்மை இந்தியா பிரச்சாரத்திற்காக விசில் போடு ஆர்மி னைகளை கோர்த்துள்ளதை பார்த்து பெருமை கொள்கிறேன். நேற்றைய போட்டியில் மைதானத்தில் இருந்த 10 கிலோவிற்கு மேல் குப்பைகளை இவர்கள் அகற்றியுள்ளனர் என பதிலிட்டுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.