போட்டி முடிந்த பின் தோனி செய்ததை மறக்கவே முடியாது தீபக் சாஹர் பேட்டி

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் சிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதினர். இப்போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற 12 பந்தில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீச தீபக் சஹாரை தோனி அழைத்தார்.

19வது ஒவரின் முதல் இரண்டு பந்தையும் புல் டாஸாக இடுப்புக்கு மேல் தீபக் சாஹர் வீசினார். இதனால் சாஹர் வீசிய இரண்டு பந்தையும் நடுவர் நோ பால் என அறிவித்து ஃபிரி ஹிட் கொடுத்தார்.

தொடர்ந்து இரண்டு பந்துகளை நோ பாலாக வீசியதால் கோபம் அடைந்த தோனி தீபக் சாஹரிடம் சென்று கோபத்துடன் அறிவுரை செய்தார். இதனையடுத்து சாஹர் வீசிய 6 பந்தில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனை தொடர்ந்து சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.

தற்போது இப்போட்டி முடிந்த பின் தோனி என்ன செய்தார் என்பதை தீபக் சஹார் கூறியுள்ளார்.,

எனக்கு தெரியும் நான் வீசிய இரண்டு பந்தும் தவறானது. தோனி என் மீது கடுங்கோபத்தில் இருந்தார். என் அருகில் வந்து ஆலோசனை தந்தார். அடுத்தடுத்த பந்துகளை சிறப்பாக வீசி ஒவரை முடித்து கொடுத்தேன்.

போட்டி முடிந்தவுடன் சக வீரர்கள் என்னை வாழ்த்தினர். டெத் ஓவரை சிறப்பாக வீசியதாக கூறினார்கள். அதே போல் தோனி என் அருகில் வந்தார். என்ன சொல்ல போகிறார் என்று நினைத்து இதயம் படபட என அடித்தது. என் அருகில் லந்த தோனி என்னை கட்டி பிடித்தது வாழ்த்து தெரிவித்தார். சிறப்பாக பந்து வீசியதாக தெரிவித்தார். அதன் பின் தான் நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். தோனிக்கு என் மீது கோபம் இல்லை. இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது என தீபக் சாஹர் கூறினார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.