விஜய் சங்கர் உனக்கு என்ன ரிஷப் பண்ட் என நினைப்பா முன்னாள் வீரர் விமர்சனம்

வருகிற மே மாத இறுதியில் 2019ம் ஆண்டுக்கான 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் தொடங்க உள்ளன. இத்தொடர் தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், இந்திய அணியின் நான்காம் நிலை வீரர் யார் என்பது இன்னும் இறுதி செய்யவில்லை பி.சி.சி.ஐ.

இந்த ஐ.பி.எல் தொடரில் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த வீரர் சிறப்பாக விளையாடுகிறாரோ அந்த வீரர் நான்காம் நிலை வீரராக தேர்வு குழுவு வால் தேர்ந்தெடுக்கபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு விஜய் சங்கர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இதனால் தனது திறமையை இந்த ஐ.பி.எல் தொடரில் நிருபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய் சங்கர்.

விஜய் சங்கர் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் ஓரளவு சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் முதல் பந்தில் இருந்தே பெரிய ஷாட் ஆட முயற்சிப்பதால், வந்த சிறிது நேரத்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்புகிறார். இதனால் தனது சீரான பேட்டிங் ஃபார்மை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விஜய் சங்கருக்கு ஆலோசனை வழங்கி டுவிட் செய்துள்ளார். 

பெரிய ஷாட்டுகளை ஆடக் கூடிய திறமை விஜய் சங்கர்க்கு உள்ளது என தெளிவாக தெரிகிறது. ஆனால் எல்லா பந்துகளையும் அடித்த ஆட அவர் ஒன்றும் ரிஷப் பண்ட் இல்லை. களத்தில் உள்ள சூழ்நிலையை உணர்ந்து விஜய் சங்கர் ஆட வேண்டும். அது எப்படி என்பதை கோலியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Comments....

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.